Instance Results

‹ Return to hymnal
Hymnal, Number:cyber
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 15,751 - 15,760 of 16,230Results Per Page: 102050
TextAudio

When Youth Devote Their Early Days

Author: Benjamin Beddome, 1717-1795 Hymnal: CYBER #15786 Meter: 8.8.8.8 Lyrics: 1 When youth devote their early days, To vain delights and sinful ways, Their prospects darken as they rise, And fill them with a dread surprise. 2 Diseases are the fruit of sin, The malady lies deep within; An evil course the mind impairs, And leaves them full of guilt and fears. 3 Sin strengthens with increasing days, And grows when nature’s self decays; Indulged, it makes their fetters strong, And leads the captive slaves along. 4 Beware, ye thoughtless, now beware, No more presume to persevere; Today with supplications come, Tomorrow death may call you home. 5 With earnestness for mercy cry And God will listen to your sigh; Now plead for pardon through His Son, And He’ll forgive what you have done. Languages: English Tune Title: ABENDS
TextAudio

பேரின்பமே பிறந்தாரே

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: CYBER #15787 First Line: பேரின்பமே, பிறந்தாரே Lyrics: 1 பேரின்பமே, பிறந்தாரே, மண்மீதில் ராஜனாம், ஒவ்வோர் உள்ளமும், ஒர் இடம் தரட்டும், விண் மண்ணும் பாடட்டும் விண் மண்ணும் பாடட்டும் விண் மண்ணும் விண் மண்ணும் விண்ணும் பாடட்டும். 2 பேரின்பமே, மீட்பர் ராஜன். மண்ணோர் பண்பாடட்டும், வயல் வெளி நீரோட்டமும் கன்மலைகளும் பாடுமே, என்றும் மகிழ்ச்சியாய், என்றும் மகிழ்ச்சியாய், இன்றும் என்றும் இன்றும் என்றும் மகிழ்ச்சியாய். 3 பாவத்துன்பம் இனி போமே, பூமியில் வளமை, தம் கிருபையை தந்திட, இறங்கியே வந்தாரே, பாவ சாபம் நீக்க, பாவ சாபம் நீக்க, பவசாபம் பாவம் சாபம், நீக்கவே. 4 பூமியின்மேல், மெய்சாந்தமே, எல்லோரும் அறிவார், அவர் நீதியின் நேர்மையை, மெய் அன்பின் மா அதிசயம், அவர் அன்பின் மாட்சிமை அவர் அன்பின் மாட்சிமை அவர் அன்பின் அவர் அன்பின் மாட்சிமை. Languages: Tamil Tune Title: [பேரின்பமே, பிறந்தாரே]
TextAudio

போ, மலைகள் மீது சொல்லு

Author: S. John Barathi Hymnal: CYBER #15788 First Line: அம்மேய்ப்பர் மந்தை காக்க Refrain First Line: போய், மலைகள் மீது சொல்லு, Lyrics: பல்லவி: போய், மலைகள் மீது சொல்லு, வயல்வெளி பள்ளதாக்கு, போ, அங்கும் இங்கும் சென்று, நம் மீட்பர் பிறந்தார். 1 அம்மேய்ப்பர் மந்தை காக்க, இரா குளிர் வேளையில், அதோ பார் வானில் ஜோதி, பிரகாசமாகவே, [பல்லவி] 2 வான் ஒளி தோன்ற மேய்ப்பர், பயந்து நடுங்கி, நம் மீட்பர் பிறந்த செய்தி, எங்கும் பறைசாற்ற, [பல்லவி] 3 ஏழைக்கோலமாக, மாடடைக்குடிலில், நம்மை மீட்க இங்கே, வந்து பிறந்தாரே, [பல்லவி] Languages: Tamil Tune Title: [அம்மேய்ப்பர் மந்தை காக்க]
TextAudio

போற்றுதலோடு வியந்து எம் விந்தை தேவனே

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: CYBER #15789 Meter: 8.6.8.6 First Line: போற்றுதலோடு வியந்து Lyrics: 1 போற்றுதலோடு வியந்து எம் விந்தை தேவனே, உம் தயவு ஞானம் சக்தி தெளிவாய் வேதத்தில். 2 விண்ணில் சுழலும் வான் மீன்கள் சொல் கேட்டு நேர்த்தியாய், என் ஆன்மத்திற்கும் தீபமே உம்மண்டை வந்தேக. 3 வயல்வெளி விளைச்சலே எம் ஆகாரமாமே, எம் வாழ்வில் யாம் தரும் கனி உம் வார்த்தேயிலுண்டே. 4 இங்கே மெய் பொக்கிஷம் யாவும் தேற்றுதலும் உண்டே, எம் வாஞ்சை ஏக்கம் இவ்விடமே நான் நம்பி வந்தேன். 5 உம் வார்த்தை தெளிவாக்கிடும் எம் குற்றம் உணர, எம் மன்னிப்பு உம் வார்த்தையில் நான் கண்டு ஏற்றிட. 6 நீர் எம்மை மீட்க மாண்டதை இங்கே நான் கற்பேனே, உம் மகிமையை கண்டிட பூமியில் நூல் இல்லை. 7 நான் இன்னும் வேதம் வாசிக்க இன்மன்னா புசிக்க பகலில் வாசித்தே இரவில் தியானித்தேகுவேன். ஆமேன். Languages: Tamil Tune Title: CAITHNESS
TextAudio

போற்றி போற்றி இரட்சகர் இயேசுவை போற்றி

Author: Fanny Crosby; S. John Barathi Hymnal: CYBER #15790 Lyrics: 1 போற்றி போற்றி இரட்சகர் இயேசுவை போற்றி, வானும் பூவும் உம் அன்பை கூறவும், ஏற்றி பாடி தூதர் நீர் மென் மேலும் போற்றி ஆண்டவரின் வல்லமை சாற்றவும், மேய்ப்பன் போல இயேசு தம் மந்தை காப்பார் அன்பாய் நாளும் கரத்திலேந்தியே, சீயோன் வாழும் தூயோரும் சான்றோரும் கூடி, போற்றி பாடி என்றும் ஆனந்தமாய் 2 போற்றி போற்றி இரட்சகர் இயேசுவை போற்றி, நம்மை மீட்க மரித்தார் பாடுண்டு, கோட்டை அரண் நம் நித்ய வாழ்வின் ராஜன் ஏற்றி போற்றி சிலுவை நாதரை, அன்பாய் மீட்பர் தாழ்மையாய் சகித்தார் முள்ளாம் கீரீடம் சிரசில் பாய்ந்திட, நம்மை மீட்க வெறுத்து கைவிடப்பட்டு, இன்றும் நம்மில் மகிமை நாதராய். 3 போற்றி போற்றி இரட்சகர் இயேசுவை போற்றி, வானில் தூதர் ஓசன்னா பாடவும், இயேசு ராஜன் என்றென்றும் ஆள்கிறார் பூவில் கிரீடம் சூட்டி என்றென்றும் போற்றுவோம், சாவே சாக மாண்டது எங்கும் சொல்வோம் உன் கூர் எங்கே? மரணமே சொல்வாய், இயேசு ராஜன் என்றென்றும் வாழ்கிறார் வென்று, இன்றும் என்றும் வல்லமை ஓங்கவே. Languages: Tamil Tune Title: [போற்றி போற்றி இரட்சகர் இயேசுவை போற்றி]
TextAudio

Lovely Youth, With Ardent Zeal

Author: Benjamin Beddome, 1717-1795 Hymnal: CYBER #15791 Meter: 8.7.8.7.8.7 Lyrics: 1 Lovely youth, with ardent zeal, Wisdom’s flowery path pursue; There shall you sweet pleasures feel, Ever springing, ever new: Sacred peace and joy combined, Hopes and comforts all refined. 2 Earth with all its boasted store, Cannot such delights impart, All its joys are mean and poor, Giving anguish to the heart: From its vanities retire, Seek the Lord with strong desire. 3 Give to Him your early bloom, Make His counsels your delight, Let His temple be your home, Love and serve Him day and night: Then shall you His blessings prove, Feel the transports of His love. Languages: English Tune Title: REGENT SQUARE
TextAudio

மகா அற்புதம்

Author: John Newton; S. John Barathi Hymnal: CYBER #15792 Lyrics: 1 மகா அற்புதம், மா பாவியாம் என்னை மீட்ட உம் அன்பு தொலைந்தலைந்தேனே என்னை கண்டீரே, கண் காணேனிப்போ காண்கிறேன். 2 உம் கிருபையினால், நான் நடுங்கி, உம் தயவால் மீண்டேன் உம் காருண்யம்தான் என் ஆஸ்தியாம், நான் நம்பினவேளை முதல். 3 என் வாழ்வில் நான் கடந்தது, துன்பம் மா வேதனை, உம் வல்லமை, இம்மட்டுமே வழி நடத்திற்றே. 4 என் தேவன் எனக்காய்த்தந்த, தம் வாக்குதத்தம் உண்மை அவர் என்னை தற்காப்பாரே, வாழ் நாள் முழுதுமே. 5 என் மாம்சமும் என் துடிப்பும், நின்று நான் சாகையில் என்னுள்ளில் அவர் தந்ததே, இன்ப சமாதானமே. 6 பனி போலவே, இவ்வுலகம், சூர்யனும் தோன்றாதே, நம் தேவன் இன்றும் என்றும் உண்டங்கே, இருப்பார் நம்முடன். 7 அங்கே நாம் என்றும் வாழ்வோம் நித்யம், பிரகாசமாய் தோன்றி, என்றென்றும் நாம் அவர் துதி பாடி போற்றி மகிழ்வோம். Languages: Tamil Tune Title: [மகா அற்புதம்]
TextAudio

மகிமையின் எல்லை முதல்

Author: James Montgomery; S. John Barathi Hymnal: CYBER #15793 Meter: 8.7.8.7.8.7 Refrain First Line: வந்து வாழ்த்தி போற்றி பாடி Lyrics: 1 மகிமையின் எல்லை முதல் பூமி எங்கும் பறந்து, பாடினீர் படைப்பினன்று மேசியா வருகையும், பல்லவி: வந்து வாழ்த்தி போற்றி பாடி இராஜ பாலன் தொழுவோம். 2 மேய்ப்பர் மந்தை காத்திருக்க இராவின் இருள் குளிரில், மண்ணோருடன் விண்ணின் தேவன் சஞ்சரிக்க ஒளியாய், [பல்லவி] 3 ஞானியரே யோசனை ஏன்? ஜோதி எங்கும் வீசுதே, வாரும் பாரும் மாந்தர் வாஞ்சை விந்தை நட்சத்ரம் கண்டீர், [பல்லவி] 4 தூய ஆவி கொண்ட நீங்கள், பயத்தோடு நம்பியே, காத்திருக்க வேந்தர் வந்தார் தோன்றுவார் தம் ஸ்தலத்தில், [பல்லவி] 5 வாஞ்சித்தே மனந்திரும்ப நரகத்தை தவிற்க, நியாயத்தீர்ப்பு தீர்த்திடாமல் தயவாய் கட்டவிழ்க்க, [பல்லவி] 6 இன்று காணும் பாலனிவர், தன் தந்தையின் ஸ்தானத்தில், தேசம் யாவும் அவர் முன்னர் முடக்கும் முழங்கால்கள். [பல்லவி] 7 அவர் படைப்பாய் நாம் ஒன்றாய் பிதா சுதன் ஆவிக்கு என்றும் ஒன்றாய் ஓர் தொனியாய் மூவரான ஏகர்க்கே. [பல்லவி] ஆமேன். Languages: Tamil Tune Title: [மகிமையின் எல்லை முதல்]
TextAudio

மரணம் கண்டு அஞ்சோமே

Author: Isaac Watts; S. John Barathi Hymnal: CYBER #15794 Meter: 8.6.8.6 Lyrics: 1 மரணம் கண்டு அஞ்சோமே, ஆண்டவர் எம்முடன், ஆழ்ந்த இருள் சூழ்ந்திடினும், அச்சத்திற்கிடம் கொடோம். 2 என் ஆஸ்தி யாவும் வீணென்றே, அவர் தம் சொல் கேட்டே, ஓடியே சேர்வேன் அழைத்திட்டால், மோசேபோல் நானுமே. 3 பைசாகின் மேலே சென்றே நான், கானானைக்காணவே, ஏதும் என்னை ஈர்க்காதே, என் சாவு திவ்யமே. 4 என் தந்தை மார்பில் நானுமே, மூச்சை நான் மறந்தேன், கேளிக்கை வாழ்வை தீர்த்தேனே, மா தூய மரணத்தால்.ஆமேன் Languages: Tamil Tune Title: [மரணம் கண்டு அஞ்சோமே]
TextAudio

மரி அன்னையுடன் யோசேப்பு

Author: Richard W. Adams; S. John Barathi Hymnal: CYBER #15795 First Line: மரி அன்னையுடன் யோசேப்பு தாவீதின் ஊருக்கு Lyrics: 1 மரி அன்னையுடன் யோசேப்பு தாவீதின் ஊருக்கு, பிரயாணத்தாலே சோர்ந்தும் தங்க இடமில்லை, தேடியும் இடமில்லை, அங்கிங்கும் அலைந்தும், இடமில்லை, இடமில்லை, ஓர் தொழுவம் வந்தார். 2 ஒரு மாளிகையும் தாங்காது, எவ்வண்ண ஆடையும், வான் ராஜன் மண்ணில் பிறந்தார் இவ்வேழைக்கோலமாய், நம் மீட்பர் இவர்தானே, கந்தைக்கோலம் கொண்டு, இக்குழந்தையின் தியாகமே, மண்ணோரை மீட்டிடும். 3 நல் மேய்ப்பர் மந்தை காத்திட்டு அயர்ந்தே தூங்கையில், மீட்பர் பிறந்த செய்தி அங்கே ஒலித்தது, அஞ்சாதீர்கள் நற்செய்தி சொல்ல நான் வந்தேனே, என்று கூறியும் மேய்ப்பரும், பயந்து நடுங்க. 4 அஞ்சாமல் நீங்கள் கேளுங்கள் உங்களுக்காகவே, தாவீதின் ஊரில் இன்றிரா பிறந்தார் மீட்பரே, நம்மை மீட்க தன் சொந்த குமாரனைத்தந்து, இவ்வளவாக நேசித்து நம்மை இரட்சிக்கவே. 5 அம்மேய்ப்பர் கண்ட காட்சியால் பயந்து வியக்க, வான் தூதர் சேனை தோன்றியே நற்செய்தி பாடினர், ஆ உன்னதத்தில் தேவனுக்கு மகிமையே, பூமியில் மெய் சமாதானம், மாந்தர் மேல் பிரியம். 6 மெய் வாஞ்சையோடு ஆவலாய் பெத்லேகேம் அடைந்து, கந்தை பொதிந்த கோலமாய் அப்பாலனைக்கண்டார், அவர்போல் நாமும் சென்று அப்பாலனை காண்போம், நம் இரட்சிப்புக்காய் வந்தாரே, தன் ஜீவனைத்தந்து. Languages: Tamil Tune Title: [மரி அன்னையுடன் யோசேப்பு தாவீதின் ஊருக்கு]

Pages


Export as CSV