15792. மகா அற்புதம்

1 மகா அற்புதம்,
மா பாவியாம் என்னை
மீட்ட உம் அன்பு
தொலைந்தலைந்தேனே
என்னை கண்டீரே, கண்
காணேனிப்போ காண்கிறேன்.

2 உம் கிருபையினால்,
நான் நடுங்கி,
உம் தயவால் மீண்டேன்
உம் காருண்யம்தான்
என் ஆஸ்தியாம்,
நான் நம்பினவேளை முதல்.

3 என் வாழ்வில்
நான் கடந்தது,
துன்பம் மா வேதனை,
உம் வல்லமை,
இம்மட்டுமே
வழி நடத்திற்றே.

4 என் தேவன்
எனக்காய்த்தந்த,
தம் வாக்குதத்தம் உண்மை
அவர் என்னை
தற்காப்பாரே,
வாழ் நாள் முழுதுமே.

5 என் மாம்சமும்
என் துடிப்பும்,
நின்று நான் சாகையில்
என்னுள்ளில் அவர்
தந்ததே, இன்ப சமாதானமே.

6 பனி போலவே,
இவ்வுலகம்,
சூர்யனும் தோன்றாதே,
நம் தேவன் இன்றும்
என்றும் உண்டங்கே,
இருப்பார் நம்முடன்.

7 அங்கே நாம் என்றும்
வாழ்வோம் நித்யம்,
பிரகாசமாய் தோன்றி,
என்றென்றும் நாம் அவர்
துதி பாடி போற்றி மகிழ்வோம்.

Text Information
First Line: மகா அற்புதம்
Title: மகா அற்புதம்
English Title: Amazing grace, how sweet the sound
Author: John Newton
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [மகா அற்புதம்]
Key: G Major or modal
Source: Virginia Harmony 1831
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us