15779. பார்த்துக் கொள்வார் தேவன், மனமே நீ துவளாதே

1 துவளாதே, என் மனமே, நீ;
பார்த்துக் கொள்வார் தேவன்.
அவரன்பு செட்டையுனுள் நில்,
பார்த்துக் கொள்வார் உன்னை.

பல்லவி:
பார்த்துக் கொள்வார் உன்னை.
என்றென்றுமே, எவ்வேளையும்.
பார்த்துக் கொள்வார் அவர்.
தேவன் பார்த்துக் கொள்வார்.

2 இதயம் நொருக்கும் காலமும்
பார்த்துக் கொள்வார் தேவன்.
பேராபத்தான வழியிலும்,
பாதுகாத்திடுவார்.

3 உன் வாழ்வின் தேவை யாவையுமே,
சந்திப்பார் நல்தேவன்.
கேட்பதை மாட்டேனெனார் என்றும்,
கவனிப்பாரென்றும்.

4 எச்சோதனையில் நீ சென்றாலும்,
பார்த்துக் கொள்வார்தேவன்.
அவர் மார்பினில் இளைப்பாரு,
காத்துக் கொள்வார் தேவன்.

Text Information
First Line: துவளாதே, என் மனமே, நீ
Title: பார்த்துக் கொள்வார் தேவன், மனமே நீ துவளாதே
English Title: Be not dismayed whate'er betide
Author: Civilla D. Martin
Translator: Unknown
Refrain First Line: பார்த்துக் கொள்வார் உன்னை
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [துவளாதே, என் மனமே, நீ]
Composer: W. Stillman Martin
Key: B♭ Major
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us