15780. பாவிகளின் நண்பனுமாம், மகிமையின்ராஜனாம்

1 பாவிகளின் நண்பனுமாம்
மகிமையின்ராஜனாம்,
தாழ்மை வேந்தன் சகோதரன்
நம் மீட்பரும் அவர்தாம்,
உந்தன் வாழ்வின் விந்தை பாடி,
நண்பர் மீட்பர் நீர்தாமே,
வல்லமையும் தாழ்மை நீரே,
உம் கிருபைக்காய் போற்றுவோம்.

2 என்றும் கைவிடாத நண்பர்,
உண்மை மேன்மை தயவும்,
எப்பொழுதும் ஏற்றுக்கொண்டு
தொலைந்தோரை தேடியே,
துக்கம் தீர்த்தானந்திக்கவே,
வாழும் மட்டும் அன்போடே,
சமாதானம் ஈந்து காக்கும்
விண்ணில் வாழும் நண்பன் நீர்.

3 நேசித்துந்தன் சேவை செய்ய
எல்லா தீங்கும் நீங்கிடும்,
பாவ கட்டெல்லாம் முறித்து
சிந்தை உமதாக்கிடும்,
உம் வருகை நோக்கி காத்து
என்றும் உம்மை காணவே,
பயமும் சந்தேகம் இன்றி
காண்போமே நாம் நேசரை.

Text Information
First Line: பாவிகளின் நண்பனுமாம்
Title: பாவிகளின் நண்பனுமாம், மகிமையின்ராஜனாம்
English Title: Friend of sinners, Lord of glory
Author: C. Newman Hall
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [பாவிகளின் நண்பனுமாம்]
Composer: Joseph Barnby
Key: F Major or modal
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us