15778. பழிவாங்கும் குணமில்லார்

1 பழிவாங்கும் குணமுள்ள,
மோசே அல்ல இயேசு,
சமாதானத்தின் தூதரே,
மீட்டே இரட்சிக்கவே.

2 மாந்தரின் வியாதி வேதனை,
தீர்க்கும் நல் வைத்யரே,
கேட்டவர் அவர்கள் வேண்டலை,
கனிவாய் காண்பாரே.

3 வல்லமையான வார்த்தையால்,
கண்கள் விழித்திதோ,
இமைகள் திறந்தே காணுமே,
இன்பமாய் ஒளிரவே.

4 வாதையால் கால் கரம் வீழ்ந்தவர்,
ஒன்றும் அசையாமல்,
ஊன்றுகோல் ஆசனம் தேடாமல்,
மான்போலே துள்ளுவார்.

5 வாய்பேசார் செவிடர் ஊனரும்,
சொல் கேட்டு பேசுவார்,
தன் ஓசை மீண்டும் கேட்டிட,
பாடியே துதிப்பாரே.

6 தீண்டொண்ணா குஷ்டரும் பார் இதோ,
மீட்பரின் கை தொட,
வாதை கொண்டோர் சப்பாணியும்,
மீண்டாரே வார்த்தையால.

7 சிற்றமாய் வீசும் புயல் காற்றும்,
வார்த்தைக்கேட்டமைதியாய்,
பேய்களும் பிசாசும் ஓடுமே,
மீண்டே வராமலே.

8 என் ஆன்மமே நீ சொல் சென்று,
மீட்பரின் வல்லமை,
கல்லரை சென்றோரும் கேட்டிதோ,
மீண்டார் மௌனம் விட்டு.

9 ஆண்டவர் மீட்பர் இயேசுவே,
பிரகாசம் உம் மேன்மையே,
உம் செயல் யாவும் பிரஸ்தாபிக்கும்,
உம் திவ்ய வல்லமை. ஆமேன்.

Text Information
First Line: பழிவாங்கும் குணமுள்ள
Title: பழிவாங்கும் குணமில்லார்
English Title: No rod of vengeance Jesus takes
Author: John Needham
Translator: S. John Barathi
Meter: C.M.
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [பழிவாங்கும் குணமுள்ள]
Composer: John Bacchus Dykes
Key: G Major or modal
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us