Instance Results

‹ Return to hymnal
Hymnal, Number:cyber
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 15,541 - 15,550 of 16,219Results Per Page: 102050
TextAudio

The Mourners Came At Break Of Day

Author: Sarah F. Adams Hymnal: CYBER #15566 Meter: 8.8.8.8.8.8 Lyrics: 1 The mourners came at break of day; Unto the garden sepulcher; With darkened hearts to weep and pray, For Him, the loved one buried there. What radiant light dispels the gloom? An angel sits beside the tomb. 2 The earth doth mourn her treasures lost, All sepulchered beneath the snow; When wintry winds, and chilling frost, Have laid her summer glories low: The spring returns, the flowerets bloom— An angel sits beside the tomb. 3 Then mourn we not belovèd dead, E’en while we come to weep and pray; The happy spirit far hath fled To brighter realms of endless day: Immortal hope dispels the gloom! An angel sits beside the tomb. Languages: English Tune Title: MELITA
TextAudio

ஆண்டவா, புயல் சீரியே வீசுதே

Author: Mary A. Baker; S. John Barathi Hymnal: CYBER #15567 First Line: ஆண்டவா புயலைப்பாரும் Refrain First Line: ஆம் காற்றும் அலைகளும் கேட்க்குமே Lyrics: 1 ஆண்டவா புயலைப்பாரும், ஆம் சீரியே வீசுதே, காரிருள் போல் மேகமும் சூழ்ந்தே, ஒதுங்கக்கரை காணோம், அழிந்திடோமோ யாம் மூழ்கி, உறங்குகின்றீரே, ஒவ்வோர் நொடியும் நடுங்கச்செய்ய, ஆழ் கடல் நம் கல்லறையோ? பல்லவி: ஆம் காற்றும் அலைகளும் கேட்க்குமே, நில் அமைதி, கடலின் சீற்றமோ, யாவுமே பேய் ஆயினும் வேறேதுமாயினுமே, ஆம் கடலின் ஆண்டவா நீர் தங்கும் எக்கப்பலும் மூழ்கிடாதே, நீர் ஆண்டவர் விண்ணிற்கும் ஆம் மண்ணிற்கும் நில் அமைதி, அமைதி யாவும் உம் சத்தம் கேட்டிடும், நில் அமைதி. 2 என் ஆன்மா துயரம் கொண்டு, நான் உம் பாதம் வீழ்கிறேன், என் உள்ளம் வியாகுலத்தால் சோர, விழித்தே நீர் இரட்சியும், நீரோடை போல என் பாவம், என்னையே மூழ்குதே, நான் அழிகிறேன் வந்தே தூக்கும், ஆம் விறைந்தே காத்திடுமே, [பல்லவி] 3 புயலும் அமைதியாகி, ஆம் யாவும் ஓய்ந்ததே, சூர்யனும் நீர் மேலே தோன்றி, விண் வீடு என் உள்ளத்தில், என்னோடே தங்கும் என் நாதா, தனியே விடாமலே, நான் ஆனந்த மாகவே சேர்வேன், ஆம் விண் வீட்டின் கரையிலே, [பல்லவி] Languages: Tamil Tune Title: [ஆண்டவா புயலைப்பாரும்]
TextAudio

ஆண்டவர் வீட்டை கட்டாவிடில்

Author: S. John Barathi Hymnal: CYBER #15568 Meter: 8.8.8.8 Lyrics: 1 ஆண்டவர் வீட்டை கட்டாவிடில், வீண் பிரயாசமாம் நம் முயற்சி, கர்த்தரின் பாதுகாப்பின்றி, காவலும் வேரேதும் வீணன்றோ? 2 சூரியன் தோன்றும் முன் எழுந்தே, இராவினிலும் தூங்காமல், அப்பத்திற்காம் பிரயாசத்தில் கர்த்தர் அருள்வார் நல் ஓய்வு. 3 கர்த்தரால் வரும் ஈவாகும், பிள்ளைகள்தாம் இதுண்மையே, தம் அம்புகள் ஆம் காத்திருக்க, ஆனந்தமே இளம் மாந்தர். 4 முதியோரின் வாழ்வு ஆனந்தம், பராக்கிரமமாய் வாலிபமும், எவ்வித பயமும் தேவையல்ல, அன்புண்டு பாதுகாப்புமுண்டு. Languages: Tamil Tune Title: DUKE STREET
TextAudio

ஆண்டவரே என் ஜெபம் கேளும்

Author: S. John Barathi Hymnal: CYBER #15569 Lyrics: 1 ஆண்டவரே என் ஜெபம் கேளும், நான் கண்ணீர் சிந்தியே உம்மிடம் வந்தேன், உம் முகம் நீர் மறைக்காமலே, நீர் என் வேண்டல் கேட்டே பதில் தாரும். துன்பம் என்னை தீயைப்போல் சுட்டெரித்தாலுமே, என் நாட்கள் புகைப்போலவே மறைந்தே சென்றாலும், நீர் போதுமே, நீர் போதுமே, என் ஜெபமே நீர் கேட்டருளும். 2 புல்லைப்போலே நான் உதிர்ந்தேனே, நான் உண்ணவும் மறந்தே மெய் சோர்ந்தேனே, வேதனையில் தனியனாக, நான் துக்கத்தால் கண்மூடா நொந்தேனே, என் சத்ருக்கள் தினம்தோரும் என்னை அண்டியே, என் கண்ணீர் என் தாகம் தீர்க்க என் துக்கம் அப்பமே,உம் கோபமே, உலர் இதழ்,என் வாழ்நாள் தான் காய்ந்த இலை போலே. 3 ஆண்டவரே நீர் என்றும் ஆள்கிறீர், தெய்வாசனம்தான் என்றேன்றும் நிச்சயம், எம் சந்ததி உம்மை வணங்க, உம் நாமமே என்றும் நிலைக்குமே, சீயோனில் தோன்றியே உந்தன் அன்பின் மூலமாய், நீர் குறித்த நாளிலன்றோ? உம் கிருபை ஈந்திடும், உம் தயவும், உம் அன்பாலே, உம் கிருபையை நீர் பொழிந்திடும். 4 எங்கள் ஜெபம் நீர் ஏற்றுக்கொள்ளும், சீயோன் மீது அன்புள்ளோர் நாங்களே, வேதனை துன்பமும் தாங்கியே, தன் இடிந்த இடிபாடினூடே, உம் வல்லமை தோன்றி எம்மை காத்து மீட்டிட, சீயோனை மீண்டும் கட்டி காத்து எழும்பிடவே, இப்பூமியின் இராஜாக்களும், வணங்கியே வாழ்த்தி போற்றவே. 5 தெய்வாசனம் நீர் வீற்றிருந்தே, குனிந்தே எம்மை தயவாய் காண்கிறீர், எம் புலம்பல் நீரே தீர்க்கவே, அழிந்தே யாம் போகாமல் காக்கின்றீர், சீயோனிலே எல்லோருமே ஒன்றாய் சேர்ந்தே, தேசங்களும் இராஜாக்களும் உன்தன் நாமத்தையே, ஆம் வாழ்த்தவே, ஆம் உம்மையே, ஆண்டவரே நீர் எம் தேவனே. Languages: Tamil Tune Title: SAGINA
TextAudio

ஆம் சூர்யன் சாயும் நேரமே

Author: Henry Twells; S. John Barathi Hymnal: CYBER #15570 Lyrics: 1 ஆம் சூர்யன் சாயும் நேரமே, நோவுற்றோர் உம்மை சூழ்ந்தனர், உபாதை வேதனை கொண்டோராய், வந்தனர் மகிழ்ந்தே சென்றனர். 2 இந்நாளும் மாலையானதே, துன்பற்றோர் இன்றும் வந்திட்டால், உம்மை யாம் காண கூடுமோ? நீர் சமீபம் என்றறிவோம். 3 எம் வேதனை நீர் தீர்ப்பிரே, துக்கத்தால் சோர்ந்து நோயினால், உம்மையே நேசிக்காதோறும், அன்பானோர் தம்மை இழந்தோறும். 4 பூலோக பாரம் தாங்காமல், பாவத்தின் சோர்வும் நீங்காமல், துக்கத்தில் மூழ்கி மீளாமல், நீரின்றி யார்? மீட்ப்பார் எம்மை. 5 இப்பூவின் மாயை அறிந்தோர், ஆனாலும் மீளாதோருண்டு, நண்பரால் வேதனை கொண்டோரும், உம் நட்பை அறிந்திடாதோரும். 6 யாம் யாரும் நல்லோய்வு கொள்ளோமே, பாவமற்றோர் எம்மில் இல்லை, சாந்தமுள்ளோர் சேவை செய்வார், தன் தன் பாவம் நன்றறிவார். 7 ஆம் நீரும் மானுடனல்லவே? சோதனை வேதனை அறிவீரே, உந்தன் காருண்யம் காணுமே, மறைவாம் காயம் தெளிவாய். 8 உம் கைகள் தொட்டிட வல்லமை, உம் வார்த்தை ஒன்றும் வீணாகா, இம் மாலை எம் ஜெபம் கேளுமே, உம் கிருபையால், நீர் குணமாக்கும். Languages: Tamil Tune Title: [ஆம் சூர்யன் சாயும் நேரமே]
TextAudio

ஆம் நல் ஐக்கியம் இன்ப தெய்வீகம்

Author: Elisha A. Hoffman; S. John Barathi Hymnal: CYBER #15571 Refrain First Line: சார்ந்து சாய்ந்து எம்மோசமும் அண்டாதங்கே Lyrics: 1 ஆம் நல் ஐக்கியம் இன்ப தெய்வீகம், நித்ய நாதரின் நல் தோள் மீது, என்ன ஆசீராம் இன்ப சாந்தமாம், எம்மோசமும் அண்டா மார்பினில். பல்லவி: சார்ந்து சாய்ந்து எம்மோசமும் அண்டாதங்கே, சார்ந்து சாய்ந்து எம்மோசமும் அண்டா மார்பிலே. 2 என்ன இன்பமே இம் மெய் பிரயாணம் நித்ய நாதரின் நல் தோள் மீது, ஆம் நல் பிரகாசம் நாட்கள் சென்றிட, எம்மோசமும் அண்டா மார்பினில். [பல்லவி] 3 எந்த ஆபத்தோ பயம் இல்லையே, நித்ய நாதரின் நல் தோள் மீது, மெய் சமாதானம் அவர் என்னுடன், எம்மோசமும் அண்டா மார்பினில். [பல்லவி] Languages: Tamil Tune Title: [ஆம் நல் ஐக்கியம் இன்ப தெய்வீகம்]
TextAudio

ஆத்மமே சூரியனுடன் விழித்தெழுவாய்

Author: Thomas Ken; S. John Barathi Hymnal: CYBER #15572 First Line: சூரியனுடன் விழித்தெழு Lyrics: 1 சூரியனுடன் விழித்தெழு அன்றன்றுள்ள வேலை நீ செய், சோம்பல் தள்ளி உற்சாகமாய், இந்நாள் பங்கை செய் பலியாய். 2 உன் காலம் நேரம் காப்பாயே, ஒவ்வொரு நாளும் வெகுமதி, உன் தாலந்தை வளர்த்திடு, அந்நாளுக்காய் உன்னை காப்பாய். 3 சம்பாஷணையில் தூய்மையாய், உன் மனசாட்சி தெளிவாய், உன் உள், புரம் காண்பார் தேவன், உன் சிந்தை அவர் காண்கிறார். 4 விழித்தெழு என் மனமே, தூதரின் கீதம் சேர்ந்திடு, இரா பகலாய் அழைக்கிறார், இராஜாவாய் என்றும் ஆள்பவர். பாடகர்க்குழாம் நீர் எழுவீர், உம் பக்தி பண் நீர் எழுப்ப, நான் உம்மைப்போல் என் வாழ்விலே, ஆராதித்தே நான் கழிப்பேன். Languages: Tamil Tune Title: [சூரியனுடன் விழித்தெழு]
TextAudio

ஆயிரம் எக்காளத்தோடும்

Author: Thomas Kelly; S. John Barathi Hymnal: CYBER #15573 Lyrics: 1 ஆயிரம் எக்காளத்தோடும், ஆர்ப்பரிப்போம் ஆனந்தம், இராஜன் இயேசு ஆட்சி செய்ய வானலோகம் மகிழ, அன்பின் இயேசுவின் நல் ஆட்சி வீற்றாரே, தம் சிம்மாசனம், தானே பூமி ஆள்கிறாரே, அல்லேலூயா பாடுவோம். 2 தூதர் தோன்றி பிரகாசமாய் தெய்வ ஆட்டை போற்றியே, பூவில் வெற்றி வீரனாக, திவ்ய நாமம் சூடியே, தூதர் வாழ்த்தி போற்றி பாட விண்ணில் மற்றோர் பாடல் ஏது? அல்லேலூயா அல்லேலூயா, அல்லேலூயா பாடுவோம். 3 தூயோர் வாரும் கூடி பாட தூதரோடு சேர்ந்தென்றும். நம்மையும் அவர் அழைப்பார், தாம் சென்ற அவ்விடமே, பாடி போற்ற ஏற்றதன்றோ? மகிமை கனம் என்றும், அல்லேலூயா அல்லேலூயா, இராஜாதி இராஜனே. 4 விண்ணின் தேவன் மண்ணில் வந்து சிலுவை சுமந்துமே, எல்லா வல்லமையும் கொண்டே, இன்றும் என்றும் ஆள்கிறார், நாமும் பாடி போற்ற இன்பம், இன்றும் என்றும் சதாகாலம், அல்லேலூயா அல்லேலூயா, பாடி போற்ற இன்பமே. 5 வாழ்க இயேசு சுவாமி என்றும், மகிமை ஒளி நீர்தாம், வாழ்வின் இராஜன் உம் பிரகாசம், ஆனந்தமாய் மகிழ்வோம், உந்தன் பிள்ளை யாம் எல்லோரும், அன்பின் இன்ப ஊற்று நீரே, அல்லேலூயா அல்லேலூயா, உந்தனன்பெம் சொந்தமே. 6 இராஜரான் என்றும் ஆள்வீர், ஜீவ கிரீடம் உமதே, ஒன்றும் உந்தன் அன்பினின்று நீக்கிடாது என்றுமே, எம்மை நேசித்தே நீர் என்றும், இன்ப வெற்றி பிள்ளைகள் யாம், அல்லேலூயா அல்லேலூயா காண் போம் உந்தன் முகமே. 7 மீட்பரே நீர் வேகம் வாரும், தாருமே மகிமை நாள், கேட்குமே அழைக்கும் சப்தம், வானும் மண்ணும் மறைந்திடும், நாமும் தங்க யாழிசைத்தே, பாடி போற்றி ஏற்றி வாழ்த்தி, அல்லேலூயா அல்லேலூயா, மகிமை இராஜனுக்கே. Languages: Tamil Tune Title: [ஆயிரம் எக்காளத்தோடும்]
TextAudio

ஆழ கல்லரையில்

Author: Robert Lowry; S. John Barathi Hymnal: CYBER #15574 First Line: ஆழ கல்லரையில் இயேசு என் ஆண்டவர் Refrain First Line: ஆண் டவர் உயிர்த்தெழுந்தார் Lyrics: 1 ஆழ கல்லரையில் இயேசு என் ஆண்டவர், காத்திருந்தாரவர் இயேசு மீட்பர். பல்லவி: ஆண் டவர் உயிர்த்தெழுந்தார், வெற்றி கொண்டே சாவின் சாபத்தை, இருள் மீதே ஜெயம் கொண்டே வீரராய் இன்றும் வாழ்கிறாரே என்றும் ஆளவே, எழுந்தார் எழுந்தார், அல்லேலூயா எழுந்தார். 2 கல்லரையில் இல்லை இயேசு என் ஆண்டவர், மூடினர் வீணன்ரோ? இயேசுவையே. [பல்லவி] 3 மரணம் பற்றாது, இயேசு என் ஆண்டவர், உடைத்தெரிந்தாரே, இயேசு மீட்பர். [பல்லவி] Languages: Tamil Tune Title: CHRIST AROSE
TextAudio

ஆனந்த களிப்பாய் நாம் பாடுவோம்

Author: S. John Barathi Hymnal: CYBER #15575 First Line: தூதர் வாழ்த்தி பாடிப் போற்றினரே Refrain First Line: ஆனந்த களிப்பாய் நாம் பாடுவோம் Lyrics: 1 தூதர் வாழ்த்தி பாடிப் போற்றினரே, மேய்பர் வயல்வெளிகளில் காத்து நிற்க தம் மந்தையை இரவின் குளிரில் மிக ஏழை எளிய மக்களாமே, பல்லவி: ஆனந்த களிப்பாய் நாம் பாடுவோம் நம் இஸ்ரவேலின் ராஜனை. 2 விண்ணில் நோக்கிப்பார்க்க மின்னும் நட்சத்ரமே, தூர கிழக்கில் அதோ ப்ரகாசிக்குதே,பூமியின்மேல் ஓர் பேரொளியாய் இரவும் பகலும் தோன்றி நின்றதே, [பல்லவி] 3 அதோ நட்சத்ரம் ஒளிகாட்டிடவே, மூன்று ஞானியர் தூர தேசம் முதல் தாங்கள் தேடி வரும் கோவை கண்டிடவே, அதை பின் சென்று தொடர்ந்தே வந்தனரே, [பல்லவி] 4 விந்தை அந்த நட்சத்ரம் தென்மேற்கில் சென்று, பெத்லகேமின் சிற்றூரில் ஓய்ந்ததே, அங்கேயே தங்கி எங்கும் செல்லாமலே, இயேசு பாலன் பிறந்த இடம் நின்றதே, [பல்லவி] 5 அவ்விடம் அடைந்து அம்மூவருமே, மிக பக்தியாய் சாஷ்டாங்கமாய் விழுந்து, பொன்னும் வெள்ளைப்போளமும் தூபவர்க்கமும் படைத்தே மகிழ்ந்தனர் நல் ஞானியரும். [பல்லவி] Languages: Tamil Tune Title: [தூதர் வாழ்த்தி பாடிப் போற்றினரே]

Pages


Export as CSV