15742. தூய ஆவி என்மேல் வீசும்

1 தூய ஆவி என்மேல் வீசும்,
ஜோதி போலே என் உள்ளத்தில்,
நீக்கும் இருளின் சாபத்தை,
பகல்போல் நானும் பிரகாசிக்க.

2 தூய ஆவி மெய் வல்லமை,
தூய்மையாக்கும் என் நெஞ்சத்தை,
எந்தன் நெடுநாள் மீறுதல்,
ஆட்கொண்ட எந்தன் ஆன்மத்தை.

3 மீட்பர் முகம் நான் காண்பேனே,
அன்பின் அழகை பார்ப்பேனே,
மாட்சி மகிமை உண்மைகள்,
எனக்கும் காண காட்டிடும்.

4 தூய ஆவி மெய் இன்பமே,
வாரும் சோர்ந்த என் வாழ்விலே,
தீரும் என் துக்கம் வேதனை,
என்னுள்ளம் தேற்றி குணமாக்கும்.

5 தூய ஆவி தெய்வீகமே,
தங்கி என் உள்ளம் தேற்றுமே,
வீழ்த்தும் என் பாவ ஸ்வாபமே,
நீர் மாத்ரம் ஆளும் என்னையே.

6 தந்தேன் என்னை நான் உம்மிடம்,
நீர் என் மூலமாய் ஆளுமே,
நானும் தூயோனாய் வாழவே,
தந்தேன் நான் என்னையே உம்மிடம்.

ஆமேன்.

Text Information
First Line: தூய ஆவி என்மேல் வீசும்
Title: தூய ஆவி என்மேல் வீசும்
English Title: Holy Ghost, with light divine
Author: Andrew Reed (1817)
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [தூய ஆவி என்மேல் வீசும்]
Composer: Louis Moreau Gottschalk
Key: C Major
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us