15740. தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே

1 தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே,
எதிரொலிக்கும் மலைகளே, பேரின்ப நற்செய்தியே,

பல்லவி:
ஆ ஆர்ப்பரிப்போம் ஆ ஆர்ப்பரிப்போம்
ஆ ஆர்ப்பரிப்போம் ஆனந்தம்,
உன்னதத்தில் மகிமை.
ஆ ஆர்ப்பரிப்போம், ஆ ஆர்ப்பரிப்போம்
ஆ ஆர்ப்பரிப்போம் ஆனந்தம்
உன்னதத்தில் மகிமை

2 மேய்ப்பரே, ஏன்? ஆனந்தம், மென்மேலும் ஏன்? ஓங்குதே?
என்ன செய்தி கேட்டிந்த, ஆர்ப்பரிப்பில் ஆழ்ந்தீரோ? [பல்லவி]

3 பெத்லேமுக்கு வாருங்கள், தூதர் பாடல் கேளுங்கள்,
பணிந்து குனிந்து வணங்கியே, துதித்து போற்றி பாடுங்கள். [பல்லவி]

4 முன்னணையில் தவழ்ந்திடும் சின்ன ராஜ பாலனை,
யோசேப்பும் மரி அன்னையும் அன்பாய் அரவணைக்கவே. [பல்லவி]

Text Information
First Line: தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே
Title: தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே
English Title: Angels we have heard on high
Translator (English): James Chadwick
Translator (Tamil): S. John Barathi
Refrain First Line: ஆ ஆர்ப்பரிப்போம் ஆ ஆர்ப்பரிப்போம்
Language: Tamil
Source: Traditional French carol
Copyright: Public Domain
Tune Information
Name: [தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே]
Key: F Major or modal
Source: French traditional carol
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us