Instance Results

Tune Identifier:"^nettleton$"
In:instances

Planning worship? Check out our sister site, ZeteoSearch.org, for 20+ additional resources related to your search.
Showing 811 - 812 of 812Results Per Page: 102050
TextAudio

முன்னோர் நாளில் பார்வோன் மகள்

Author: Carolyn W. Gilette; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15813 Lyrics: 1 முன்னோர் நாளில் பார்வோன் மகள் ஆற்றின் ஓரம் நடந்தாள், கூடை ஒன்றில் பத்ரமாக அழகானதோர் குழந்தை, பச்சிளம் குழந்தையது வாழ தாயும் வைத்தாளோ? ஈயும் அன்பு ஆழ்ந்த அன்பு பிறரை காக்கும் அன்பதே. 2 ஆண்டவா நீர் ஆசீர் தந்தீர் உந்தனன்போடு வாழவே, சிறியோரை அணைத்தால் யாம் உம்மையே அணைப்பதாம், இவ்வுலகில் அன்பு இன்றி பாடுரும் சிறாருண்டு. அன்பு எம்மை இணைப்பதுதான் எங்கள் ஜெபத்தின் பதிலாம். 3 ஆண்டவா நீர் எம்மை ஏற்று உம் சொந்தமாய் கொண்டீரே, எங்களை நீர் ஏற்றதாலே மானுடமே ஒன்றன்றோ? ஆசீர் தாரும் அணைப்போர்க்கு சுதந்திரமாய் விட்டோர்க்கும். ஒவ்வோர் சிறாரும் நேசிக்கப்பட திருச்சபைகள் முயல. Languages: Tamil Tune Title: [முன்னோர் நாளில் பார்வோன் மகள்]
TextAudio

வாரும் ஆசீர்வாத ஜீவ ஊற்றே

Author: Robert Robinson; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15837 First Line: ஆசீர்வாத ஜீவ ஊற்றே Lyrics: 1 ஆசீர்வாத ஜீவ ஊற்றே, எந்தன் நெஞ்சம் பூரிக்க, வாரும் தாரும் என்றும் கேளும் எந்தன் மகிழ் கீதமே, உம் ஆனந்த பாடல் கற்பியும், விண்ணின் தூதர் போலவே, கன்மலைமேல் கண்ணை வைத்தேன் மீட்பின் மெய் மா அன்பிதே. 2 எந்தன் உள்ளம் துக்கித்தாலும் மாம்சம் பாவம் நீக்கியே, நீரே தாரும் பாக்ய ஆசீர் இன்றே நான் துவங்கினேன், தேவனே நீர் எபிநேசர், உம்மால்தானே இங்குள்ளேன், நம்பி நானும் உமதன்பால் வீடடைவேன் முடிவில். 3 இயேசுவே நீர் என்னை கண்டீர் திக்கற்றோனாய் திரிந்தேன், நீரே என்னை தீங்கு நாளில் இரத்தம் சிந்தி மீட்டீரே, உம் தயவு என்றும் என்னை, இரட்சித்தென்னை காத்ததே, மாளும் மானிடன் நான் என்ன சொல்ல கூடும் என்நாவால். 4 உம் கிருபையின் கடன் என் மேல் சேர்ந்தே அனுதினம், நல் ஆண்டவா கட்டி வையும் சிதரும் என் நெஞ்சத்தை, விட்டோடுமே, எந்தன் ஆன்மா, உம்மையே என் நேசரே, இதோ தந்தேன் எந்தன் உள்ளம், பூட்டி வையும் உம்மிடம். 5 பாவம் செய்ய இயலா நாள் உம்முகம் நான் காண்பேனே, இரத்தத்தாலே தோய்த்த அங்கி அணிந்தும்மை பாடுவேன், வாருமே என் ஆண்டவரே, தந்தேன் எந்தன் ஆன்மமே, உந்தன் தூதர் அனுப்பிடும் நித்ய எல்லை சேர்க்கவே. Languages: Tamil Tune Title: [ஆசீர்வாத ஜீவ ஊற்றே]

Pages


Export as CSV