15785. பொங்கிடும் உதிர ஊற்றுண்டு

1 பொங்கிடும் உதிர ஊற்றுண்டு இம்மானுவேலினதே,
அவ்வூற்றில் மூழ்கும் பாவிகள் முற்றும் தூயோராவாரே,
முற்றும் தூயோராவாரே, தூயோராய் ஆவாரே,
அவ்வூற்றில் மூழ்கும் பாவிகள் முற்றும் தூயோராவாரே.

2 சாகும் அக்கள்வன் குரூசினில் கண்டான் மகிழந்ததை,
நாமும் அப்பாக்யம் காண்போமே நம் பாவம் நீங்கவே,
நம் பாவம் நீங்கவே, நம் பாவம் நீங்கவே,
நாமும் அப்பாக்யம் காண்போமே நம் பாவம் நீங்கவே.

3 ஆம் தேவ ஆட்டின் இரத்தமே என்றும் தீரா ஜீவனே,
சபையோரெல்லோரும் மீண்டிட்டே இனி பாவம் செய்யாமல்,
இனி பாவம் செய்யாமல், ஆம் பாவம் செய்யாமல்,
சபையோரெல்லோரும் மீண்டிட்டே இனி பாவம் செய்யாமல்.

4 நானும் கண்டேன் விஸ்வாசத்தால் உம் காயம் செய்யும் மாயம்,
நல் மீட்பை தந்தே காத்திடும் நான் சாகுமட்டுமே,
நான் சாகுமட்டுமே, நான் சாகுமட்டுமே,
நல் மீட்பை தந்தே காத்திடும் நான் சாகுமட்டுமே.

5 மற்றோர் இன் பாடல் பாடுவேன் உம் மீட்பின் வல்லமை,
திக்கிடும் என் நாவும் பாடுமே மரித்தே கிடக்கையில்,
மரித்தே கிடக்கையில், நான் மாண்டென் குழியில்,
மற்றோர் இன் பாடல் பாடுவேன், மரித்தே கிடக்கையில்.

6 ஆண்டவா நீர் எனக்காயத்தம் செய்தீர்ரென்றறிவேன்,
பாத்ரமில்லா எனக்காகவே தங்க சுரமண்டலம்,
தங்க சுரமண்டலம், தங்க சுரமண்டலம்,
பாத்ரமில்லா எனக்காகவே தங்க சுரமண்டலம்.

7 காலா காலமாய் மீட்டியே தேவ வல்லமையினால்,
கலையா ஸ்ருதியுடன் மீட்டியே உம் நாமம் போற்றிடவே,
உம் நாமம் போற்றிடவே, உம் நாமம் போற்றிடவே,
கலையா ஸ்ருதியுடன் பாடியே உம்மை மாத்ரம் போற்றிடவே.

ஆமேன்.

Text Information
First Line: பொங்கிடும் உதிர ஊற்றுண்டு இம்மானுவேலினதே
Title: பொங்கிடும் உதிர ஊற்றுண்டு
English Title: There is a fountain filled with blood
Author: William Cowper
Translator: S. John Barathi
Meter: CMD
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: CLEANSING FOUNTAIN
Meter: CMD
Key: C Major
Source: Early American Melody



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us