15753. நம் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு தேசமும்

1 நம் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு தேசமும்,
ஓர் நேரமும் வந்திடும், தீர்மானிக்க,
வாய்மையின் போராட்டம் பொய்மையுடன் தோன்றிடும்,
ஆம் தீமைக்கும் நன்மைக்கும் போராட்டம்.
மா பெரிய காரியம் தீர்மானம் தானே
ஒவ்வொன்று வாய்க்கும் மற்றோன்று வாய்கா,
நம் தீர்மானம் என்றும் என்றென்றும் ஆளும்,
மெய் ஒளியே அல்லது கும் இருளோ.

2 உண்மையில் நல் மேன்மை தீமையினால் சாபம்,
ஆஸ்தியும் அந்தஸ்தும் வீணன்றோ,
நன்மையினால் சேரும் யாவையுமே நன்மையே,
நேர்மையாய் நீ வாழ்ந்திட போராடு
நீ தைரியமாய் நாடு நன்மையையே தேடு
கோழையைப்போல் நீயும் போய் ஒதுங்காதே,
எல்லோருமே நேர்மை நீதியுடன் வாழ்ந்தே,
மீண்டுமே விஸ்வாசத்தை அண்டிக்கொள்வோம்.

3 வெந்தெரியும் தேகம் சாட்சிகள் சரீரம்
காட்டிடும் ஒளியிலே காண்கிறோம்,
முன்னேரி செல்வோம் கல்வாரியண்டை,
என்றும் பின்னோக்காமலே முன்னே செல்வோம்,
ஒவ்வொரு சூழல் ஒவ்வொரு பாடம்
காலம் பதில் சொல்லும் நல் அனுபவம்,
மேலும் முன்னே சென்று உண்மைவழி நின்று
ஆம் வென்றிடுவோமே நாம் உண்மையே மெய்.

4 தீமையாலே தோன்றும் மா செழிப்பும் தீயதே,
உண்மைக்கு ஈடேதும் ஆகாதே,
தற்கொலைக்கொப்பாகும் தீமையான தீர்மானம்
ஆகாது போல் தோன்றினும் வென்றிடுமே,
தீமையே பொய் மேன்மை உண்மையே மெய் தன்மை
மாய்மாலமே தீமை கேடாகுமே,
காப்பாரே நம் தேவன் நம் நிழலில் நின்றவர்
தம் மக்களை காக்கவே காத்திருந்தே.

Text Information
First Line: நம் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு தேசமும்
Title: நம் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு தேசமும்
English Title: Once to every man and nation
Author: James R. Lowell
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: EBENEZER
Composer: Thomas John Williams
Key: f minor
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us