15754. நம்பி கீழ்ப்படி

1 நம் ஆண்டவரின்
வார்த்தை ஒளியில் நாம்,
நம்பி நடந்தால் அற்புதமே,
அவர் சித்தமே நாம்
என்றும் செய்திருந்தால்,
தினம் காண்போம் நல் ஆனந்தமே,

பல்லவி:
கீழ்ப்படிந்து நம்பி நடந்திடு,
வழி வேறேதும் இல்லை,
நம்பி நடந்திடு. (ஆமேன்).

2 ஒரு நிழலுமே
கரு மேகமுமே,
அவர் புன்னகை கண்டோடிடும்,
கவலைக்கண்ணீரும்
பயம் சந்தேகமும்,
நிற்க்காது நம்பி நடந்தால். [பல்லவி]

3 நம் பார சுமை
மன வேதனையோ,
அவர் நம் பிரயாசம் அறிவார்,
துக்க அங்கலாய்ப்போ?
வெறுப்போ கசப்போ?
ஓடும், நாம் நம்பி நடந்திட்டால். [பல்லவி]

4 அவர் அன்பின் ஆழம்
கிருபையின் தூரமும்,
அவர் சமூகம் வீழ்ந்தே சேர்ந்தால்,
கருணை பரிவும்
தரும் ஆனந்தமும்,
கண்டு நடப்போம் நம்பியே நாம். [பல்லவி]

5 அன்பின் ஐக்கியத்தில் நாம்
அமர்ந்தவர் பாதம்,
அல்ல கூட நடந்து சென்றோ?
அவர் கட்டளையும்,
அவர் சொல்லும் கேட்டு,
பயமின்றி நம்பி நடப்போம். [பல்லவி]

Text Information
First Line: நம் ஆண்டவரின்
Title: நம்பி கீழ்ப்படி
English Title: When we walk with the Lord
Author: John H. Sammis
Translator: S. John Barathi
Refrain First Line: கீழ்ப்படிந்து நம்பி நடந்திடு
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [நம் ஆண்டவரின்]
Composer: D. B. Towner
Key: F Major or modal
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us