15655. என் இயேசுவே உம்மை நேசிக்கிறேன்

1 நீர் என் சொந்தம் இயேசுவே
நான் உம்மை நேசிக்கிறேன்,
என்பாவ சிற்றின்பம் நான் வெறுத்திடுவேன்,
என் மீட்பரே தயவுள்ள இரட்சகரும் நீரே,
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும், எப்போதும்.

2 நான் நேசிக்குமுன்பே நீர் நேசித்தீரே,
சிலுவையில் மாண்டே மன்னிப்பீந்தீரே
முள் கிரீடம் எனக்காக, அணிந்தீர் என் ஸ்வாமி
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும் எப்போதும்.

3 நான் வாழ்ந்தாலும் நேசிப்பேன்
நான் மாண்டு போனாலும்,
என் சுவாசம் நீர் தரும்வரை உம்மை நேசிப்பேன்,
என் கண் மூடி சாக நான் காத்திருக்கும் போதும்
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும் எப்போதும்.

4 வான் வீட்டில் என்றும், மகிமை பேரின்பமே,
நான் அங்கும் நின்றும்மை, ஒளியில் துதிப்பேன்,
நல் ஜீவ கிரீடம் சூடி ஆனந்தித்தே பாடி
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும் எப்போதும்.

Text Information
First Line: நீர் என் சொந்தம் இயேசுவே
Title: என் இயேசுவே உம்மை நேசிக்கிறேன்
English Title: My Jesus, I love Thee, I know Thou art mine
Author: William R. Featherston
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [நீர் என் சொந்தம் இயேசுவே]
Composer: Adoniram Judson Gordon
Key: F Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us