15814. முன்னே செல்வோம் வாரீர்

1 முன்னே செல்வோம் வாரீர், போர் முனை செல்வதுபோல்,
சிலுவை கொடி ஏந்தி,பின்னே நாம் செல்வோம்.
இயேசு நம் தலைவர், முன்னே செல்கிறார்,
நாமும் பின்னே செல்வோம்,சிலுவைக்கொடி பின்னே,

பல்லவி:
முன்னே செல்வோம் வாரீர்
போர் முனை செல்வதுபோல்
இயேசு நம் தலைவர்
நாம் பின் செல்வோமே.

2 அவர் நாமம் சொல்ல, சாத்தான் ஓடுவான்,
வாரும் நீரும் வீரர், வெற்றி நோக்கியே,
நரகத்தின் தூண்கள், அதிரும் படியே,
போற்றும் துதி ஓசை, அதிர செய்திட, [பல்லவி]

3 வல்ல சேனை போல செல்லும் சபையே,
முன்னே சென்றார் தூயோர், நாம் பின் செல்கின்றோம்,
ஒன்றே நாம் எல்லோரும், ஓர் சரீரமே,
ஓர் விஸ்வாசம் ஓர் நம்பிக்கை, ஒன்றே சேவையாம், [பல்லவி]

4 சிம்மாசனம் கிரீடம் இராட்ஜியம் ஒழியும்
ஆனால் கிறிஸ்து ஆட்சி, என்றும் நிலைக்கும்
நரகத்தின் வாசல், சபையை அசைக்காதே,
நமக்குண்டு கிறிஸ்து வாக்கு என்றும் மாறாதே. [பல்லவி]

5 வாரும் நீங்கள் யாவரும் திரள் கூட்டமாய்,
ஆனந்தமாய் பாடி, சேர்ந்து துதிக்க,
துதி கனம் மகிமை, கிறிஸ்து ராஜர்கே,
தூதர் மாந்தர் கீதம் காலா காலமாய். [பல்லவி]

Text Information
First Line: முன்னே செல்வோம் வாரீர், போர் முனை செல்வதுபோல்
Title: முன்னே செல்வோம் வாரீர்
English Title: Onward, Christian soldiers
Author: Sabine Baring-Gould
Translator: S. John Barathi
Refrain First Line: முன்னே செல்வோம் வாரீர்
Language: Tamil
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us