15810. முடிவுவரை நிலைப்போர் பாக்யராம்

1 வீணாய் கைகள் கட்டி நின்றே,
விண்வீட்டின் ஏக்கமா?
நாமும் வெற்றி பெற்றோம் என்றே
போர் முன் கூறலாகுமோ?

முடிவுவரை நிலைப்போரே பாக்யராம்
எல்லாம் நலமே,
ஜீவவிருட்சத்தின் கனியை புசித்தே
இயேசுவோடென்றும் வாழுவார்.

2 பரிசு நிச்சயம் அல்லவே,
நாம் ஓடினாலன்றி,
நித்யானந்த்தின் கனியும் பெற
ஓடினாலன்றி,

3 நம் நிலையில் நாம் தூங்காமல்,
பாதுகாப்பு இன்றியே,
சிலுவை சுமப்போர் மட்டுமே
ஆம் கிரீடம் பெறுவார்,

4 சிலுவை ஒன்றே நம் மேன்மையாம்,
கிறிஸ்துவே நம் பாடலே,
அவர் நீதி வஸ்த்திரம் சேர்ந்து நாம்
மீட்கப்பட்டோரோடு,

Text Information
First Line: வீணாய் கைகள் கட்டி நின்றே
Title: முடிவுவரை நிலைப்போர் பாக்யராம்
English Title: We cannot fold our hands at ease
Author: Fanny Crosby
Translator: S. John Barathi
Refrain First Line: முடிவுவரை நிலைப்போரே பாக்யராம்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [வீணாய் கைகள் கட்டி நின்றே]
Composer: John R. Sweney
Key: E♭ Major
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score

Suggestions or corrections? Contact us