15806. மா மகிமை செய்தி கேட்டோம்

1 மா மகிமை செய்தி கேட்டோம்
ஆண்டவரின் சீயோனே,
வாக்கு மாறா வார்த்தை என்றும்
நாமும் வாசம் செய்யவே,
கற்பாறைமேல் கட்டப்பட்டு
திட்டமாக நிற்குமே,
சூழப்பட்டு இரட்சிப்பினால்
எங்கும் இன்பம் தோன்றுமே.

2 சென்றவர் தம் மக்கள் தேடி
மேக ஸ்தம்பம் தீச்சுடரும்,
முன்னே சென்று காத்து நடத்தி
ஆண்டவர் சமூகமே,
பின்னே சென்று மகிமை கண்டு
இரா பகல் வெயில் நிழல்,
உண்ண மன்னா திண்ணம் தினம்
வேண்டும்போதெல்லாம் தந்தாரே.

3 ஜீவ ஊற்றின் ஓடை நதிகள்
தூய அன்பில் தோன்றி வர,
நம் பிள்ளைகள் பெற்று மீண்டு
தேவை முற்றும் அற்றோறாய்,
யார்? சேர்வார் அந்நீர் பருக
தேவ கிருபையால் நாமும்,
சதா காலம் நம்மை தாங்கும்
என்றும் மாறா வாக்கிதே.

4 சீயோன் வாழும் யாவர் நாமும்
மீட்பர் இரத்தத்தால் மீண்டோம்,
நம் விஸ்வாசம் அவர் மீதே
வைத்தார் நம்மை ஸ்தானத்தில்,
அவர் அன்பை காட்டி நாமும்,
நம்மை நாமே காத்தாள்வோம்,
நாம் நம் பாத்ரம் ஸ்தோத்ரமாக
நம் நன்றி கடனாய் வைப்போமே.

5 சீயோன் சொந்தம் நானுமன்றோ?
உம் கிருபையால் ஆனேனே,
இவ்வுலகில் வாழ்வோ தாழ்வோ,
நான் உம் நாமம் போற்றுவேன்,
நித்யமில்லா அழியும் லோகம்,
உம் மகிமை மேன்மையும்,
என்றும் வாழும் ஆனந்தமும்
சீயோன் வாழ்வோரே அறிவார்.

Text Information
First Line: மா மகிமை செய்தி கேட்டோம்
Title: மா மகிமை செய்தி கேட்டோம்
English Title: Glorious things of thee are spoken
Author: John Newton
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [மா மகிமை செய்தி கேட்டோம்]
Composer: Joseph Haydn
Key: F Major or modal
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us