15805. மாடடை குடில் ஒன்றில்

1 மாடடை குடில் ஒன்றில்
கட்டில் மெத்தை இன்றி,
நம் பாலன் இயேசு தூங்க
வெறும் புல் தான் மெத்தை,
விண் நட்சத்திரம் காண
அவர் தூங்கும் இடம்,
நம் ஏழை இயேசு பாலன்
புல் மீதுறங்க.

2 மா மோ மே பசு காளை
சப்தம் கேட்டு எழ,
ஆனால் விந்தை இயேசு பாலன்
அழவே அழாமல்,
நான் உம்மை நேசிக்கின்றேன்
என்னை பாரும் நீரே,
என் அருகே இரும் காரும்
காலை வரை.

3 நான் உம்மை வேண்டுகின்றேன்
என்னோடே இரும்,
என் சமீபம் என்றும்
தங்கி நேசித்திடும்,
என்னைப்போல் எல்லோரையும்
நேசிப்பீர் நம்புவேன்
எம்மை உந்தன் பிள்ளையாக்கும்
உம்மோடென்றும் வாழ.

Text Information
First Line: மாடடை குடில் ஒன்றில்
Title: மாடடை குடில் ஒன்றில்
English Title: Away in a manger, no crib for a bed
Author (st. 1-2): Anonymous
Author (st. 3): John T. McFarland
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [மாடடை குடில் ஒன்றில்]
Composer: William J. Kirkpatrick
Key: F Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us