15769. நிழல்கள் நீண்டு இருள் சூழுதே

1 நிழல்கள் நீண்டு இருள் சூழுதே
நாளை என்ன நேறும் என்றறியோமே
உம் சித்தம் செய்தோம் தாரும் அமைதி
உம் அன்பை நம்பினோம் நீர் காப்பீரே.

2 ஒன்றை யாம் கேட்போம் இந்நல் மாலையில்
மனக்கண்ணில் காட்டும் எம் இடம் எங்கோ
மேனி மெலிந்தே கண்கள் மங்குதே
உம் அன்பை கூரும் காட்சி காட்டிடும்.

3 சாட்சியாய் சொல்ல எம் சந்ததிக்கே
வாக்கு மாறா உந்தன் வார்த்தை உண்மையை
சா மட்டும் காக்கும் வல்ல தயவை
காத்து வழி நடத்தும் நண்பன் நீர்

4 எங்கள் ப்ரயாசம் இங்கு முடிந்தே
மரணத்தின் தூதன் பாடல் கற்கவே
விசுவாசத்தோடே மேலே பறந்தே
வானத்திற்கப்பால் தங்க சாலைக்கே

Text Information
First Line: நிழல்கள் நீண்டு இருள் சூழுதே
Title: நிழல்கள் நீண்டு இருள் சூழுதே
English Title: As shadows lengthen and the night grows cold
Author: Richard W. Adams
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [நிழல்கள் நீண்டு இருள் சூழுதே]
Composer: William Henry Monk
Key: E♭ Major
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us