15759. நல் கிறிஸ்தோரே எல்லோரும்

1 நல் கிறிஸ்தோரே எல்லோரும்,
மெய் ஆன்ம வாஞ்சையோடும்,
சொல்லும் செய்தி கேட்ப்பீரே,
இன்று கிறிஸ்து இயேசு ஜென்மித்தார்,
காளை கழுதை வணங்குதே,
இப்போதவர் முன்னணையிலே
கிறிஸ்து பிறந்தார், கிறிஸ்து பிறந்தார்,

2 மெய் இன்பம் இனி என்றுமே,
சந்தோஷம் பொங்கி பொங்குமே,
இன்று நமக்காய் பிறந்தாரே,
மோட்ச வாசல் நமக்காய் திறந்தாரே,
மாந்தர் வாழ்வார் என்றுமே,
ஆ நமக்காக வந்தாரே,
கிறிஸ்து பிறந்தார், கிறிஸ்து பிறந்தார்,

3 மரண பயம் இனி இல்லை,
ஆனந்தமே மகிழ்ச்சியே,
இரட்சிக்கவே, பிறந்தாரே,
உன்னை என்னை எல்லோரையும்,
என்றும் விண்ணின் வாழ்விற்கே,
மீட்கவே பிறந்தாரே,
கிறிஸ்து பிறந்தார், கிறிஸ்து பிறந்தார்.

Text Information
First Line: நல் கிறிஸ்தோரே எல்லோரும்
Title: நல் கிறிஸ்தோரே எல்லோரும்
English Title: Good Christian men, rejoice
Author: Heinrich Suso
Translator (English): John M. Neale
Translator (Tamil): S. John Barathi
Meter: 66.77.78.55
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [நல் கிறிஸ்தோரே எல்லோரும்]
Meter: 66.77.78.55
Key: F Major or modal
Source: German melodyMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us