15749 | The Cyber Hymnal#15750 | 15751 |
Text: | தேற்றிடும் தூதனின் மென் நற்செய்தி |
Author: | Septimus Winner |
Translator: | S. John Barathi |
Tune: | [தேற்றிடும் தூதனின் செய்தி] |
Composer: | Septimus Winner |
Media: | MIDI file |
1 தேற்றிடும் தூதனின் செய்தி,
கேட்டிரா பாடமன்றோ?
திண்ணமாம் அன்பின் நற்செய்தி,
ஆறுதல் தேற்றுதலே,
காத்திரு இருள் சென்றோட,
காத்திரு புயலோய,
நாளை நல் பிரகாசம் காண்பாய்,
சாரலும் சென்றோய்ந்திடும்.
பல்லவி:
மென்மையான, தேற்றுதல் செய்தியே,
ஆறுதலே, என் ஆன்மா மகிழ.
2 இருளும் சூழ்ந்திடும் இராவில்,
கண்ணேதும் காணா நேரம்,
நட்சத்ர ஒளி பிரகாசம் தாராதோ?
முன்னே காண,
இராவிருள் நம்மையும் சூழ,
ஏன் மனம் திகைக்குதே?
இருள் சென்றோடுமே வேகம்,
நற்பகல் வந்திடுமே, [பல்லவி]
3 நம்பிக்கையே நல் நங்கூரம்,
உள்ளத்தின் ஆழத்திலே,
ஆண்டவர் சென்ற வழியாம்,
வென்றாரே மரணத்தை,
வந்திடு வந்திடு நீயும்
நைந்த என் உள்ளத்திற்கே,
தந்திடு மகிமை ஆசீர்,
எங்குமே சென்றிடாமல். [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | தேற்றிடும் தூதனின் செய்தி |
Title: | தேற்றிடும் தூதனின் மென் நற்செய்தி |
English Title: | Soft as the voice of an angel |
Author: | Septimus Winner |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | மென்மையான, தேற்றுதல் செய்தியே |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [தேற்றிடும் தூதனின் செய்தி] |
Composer: | Septimus Winner |
Key: | C Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |