15735. திண்ணமாம் ஆசீர்

1 திண்ணமாம் ஆசீர் இயேசென் நேசர்
மகிமை வாழ்வின் நல் சுவையன்றோ?
ஸ்வீகாரம் நானே, இரட்சிப்பினால்,
அவராவியால் தம் இரத்தத்தால்,

பல்லவி:
இதுவென்வாழ்வு இதென் பாடல்,
போற்றியே பாடி முழு நாளும்,
இதுவென் வாழ்வு இதென் பாடல்,
இரட்சகரை நான் போற்றிடுவேன்

2 அர்ப்பணித்தேனே, மகிழ்ச்சியே,
ஆனந்த காட்சி, கண்டேனிப்போ,
வானிலிருந்து தூதர் தோன்ற,
கிருபை தொனிதான் அன்பினோசை,

3 அமைதியான அர்ப்பணிப்பு,
என் மீட்பராலே, ஆசீர் பெற்றேன்,
விழித்திருந்தே, காத்திருந்தே,
அவர் அன்பாலே, நன்மை பெற்றேன்.

Text Information
First Line: திண்ணமாம் ஆசீர் இயேசென் நேசர்
Title: திண்ணமாம் ஆசீர்
English Title: Blessed assurance, Jesus is mine
Author: Fanny Crosby
Translator: S. John Barathi
Refrain First Line: இதுவென்வாழ்வு இதென் பாடல்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [திண்ணமாம் ஆசீர் இயேசென் நேசர்]
Composer: Phoebe Palmer Knapp
Key: D Major
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us