15728. சோதனையால் விழாதே

1 சோதனையால் விழாதே,
வீழ்தல் பாவமன்றோ?
ஒவ்வொரு வெற்றியும் பாடம்,
ஒவ்வொன்றும் ஒருவிதம்,
போராடு நீ தைரியமாய்,
இருளில் சிக்காமலே,
இயேசுவை நீ நோக்கு,
அவர் வழி செய்வார்,

பல்லவி:
இரட்சகர் துணை நீ நாடு,
காப்பார் இருந்துன்னோடு,
வந்து தன் பெலன் ஈந்து,
இறுதி வரையிலே.

2 துஷ்டரோடிணங்காதே,
வார்த்தை கவனம் வை,
தேவனின் நாமம் நீ வீணே
வழங்காய் என்றுமே,
ஞானமாய் நீ நிதானமாய்,
கனிவுடன் கருத்தாய்,
இயேசுவை நீ நோக்கு,
அவர் பார்த்துக்கொள்வார், [பல்லவி]

3 வெற்றி பெற்றோர்க்கு கிரீடம்,
தேவன் அருளுவார்,
விசுவாசத்தால் நாம் வெல்வோம்,
விழுந்து எழுந்தோராய்,
நம் மீட்பர் அவரே,
நம் பெலன் புதுப்பிப்பார்,
இயேசுவை நீ நோக்கு
அவர் யாவும் செய்வார், [பல்லவி]

Text Information
First Line: சோதனையால் விழாதே
Title: சோதனையால் விழாதே
English Title: Yield not to temptation
Author: Horatio R. Palmer
Translator: S. John Barathi
Refrain First Line: இரட்சகர் துணை நீ நாடு
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [சோதனையால் விழாதே]
Composer: H. R. Palmer
Key: B♭ Major
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us