15723. சிலுவையினண்டையில்

1 நான் வாஞ்சித்தோனாய் காத்து சிலுவையண்டையில்,
கற்பாறையின் நல் நிழலில் இச்சோர்ந்த பூமியில்,
வனாந்திரத்தில் ஓர் வாசமே வெம் கோடை காய்ச்சலில்,
ஓர் தாபரம் யாம் தங்கி ஓய சோர்ந்தபாதையில்.

2 ஆனந்தமான நிழல் வந்தோர்க்கு இன்பமே,
விண் வீட்டின் நீதி திக்கற்றோரும் ஆனந்திக்க,
இவ்வாக்குத்தத்தம் தந்தாரே மா தூய வார்த்தையே,
என் இயேசுவின் சிலுவையே விண்ணேகும் வழியாம்.

3 அப்பாலே அங்கே ஆழி மா இருள் சூழ்ந்துமே,
மரண குழி உண்டங்கே பாதாள அகலம்,
இதன் இடையே நிற்குதே நம் நேசர் சிலுவை,
தம் கைகள் விரித்தே நம் நித்ய வாழ்வின் பாதையாம்.

4 என் கண்கள் காணுதே ஆம் எனக்காய் மாண்டதை,
வேதனையுடன் காண்கிறேன் அவர் துன்புற்றதை,
என் நொந்த உள்ளம் கொண்டே நான் கண்ணீரோடே நின்றே,
இவ்விந்தை அன்பும் பரிவும் என் பாத்ரமின்மையும்.

5 இன்நிழலில் நானுமே ஆம் தஞ்சமாயினேன்,
வேரென்ன நான் வாஞ்சிப்பேனே அவர் பிரகாசமே,
ஆம் போதும் அது எனக்கு வேறொன்றும் வாஞ்சியேன்,
என் பாவ தேகம் எந்தன் வெட்கம் மேன்மை சிலுவை.

Text Information
First Line: நான் வாஞ்சித்தோனாய் காத்து சிலுவையண்டையில்
Title: சிலுவையினண்டையில்
English Title: Beneath the cross of Jesus
Author: Elizabeth C. Clephane
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: ST. CHRISTOPHER
Composer: Frederick C. Maker
Key: D♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us