15720. சாகப்பிறந்தேனா?

1 சாகப்பிறந்தேனா?
என் சரீரம் மாய?
என் ஆவி பறந்தேகுமா?
அறியா உலகே.

2 இருள் சூழ்ந்த தேசம்,
எண்ணி பார்க்கக்கூடா,
மாண்டோர் கூடும் இடமிதோ?
மறந்தொழிந்ததோ?

3 உலகை விட்டேகி,
நான் எங்கே சேர்வேனோ?
நித்ய மகிழ்ச்சியோ? வேறோ?
இதில் எனக்கெதோ?

4 எக்காள சப்தமே,
கேட்டே நான் எழவே,
மகிமை கிரீடம் சூடியே,
நீதியின் இராஜனாம்.

5 எவ்வாறே நான் எழ?
வென்றோ? வருந்தியோ?
பயந்தோ? அன்றி மகிழ்ந்தோ?
சாபமோ? ஆசீரோ?

6 தூதர் கூட்டத்தோடோ?
துதிப்போர் சேனையோ?
ஆன்மாவை சாத்தான் பற்றவோ?
தன் கடன் தீர்க்கவே.

7 சந்தேகம் தீர்ப்பார் யார்?
நெஞ்சம் பிளந்ததே,
தள்ளப்பட்டோனாகவோ நான்?
ஆசீர் பெற்றோரோடோ?

8 விரட்டப்பட்டோனோ?
என் மீட்பருடனோ?
கட்டளை கேட்டோனாய் விண்ணில்,
அல்ல நரகிலோ?

ஆமேன்.

Text Information
First Line: சாகப்பிறந்தேனா?
Title: சாகப்பிறந்தேனா?
English Title: And am I born to die?
Author: Charles Wesley
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: FRANCONIA
Composer: Johann Balthasar König
Meter: SM
Key: D Major
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us