15645. எல்லா படைப்பும் ஒன்றாக, வல்ல நம் இராஜன் போற்றுவோம்

1 எல்லா படைப்பும் ஒன்றாக,
வல்ல நம் இராஜன் போற்றுவோம்,
அல்லேலூயா அல்லேலூயா
நீர் மா பிரகாச சூரியன்,
மென் வெள்ளி ஒளி சந்திரன்,

பல்லவி:
போற்றுவோமே, புகழ்பாடி,
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

2 ஓங்கியே வீசும் காற்றே நீ,
வானிலுலவும் முகிலே,
அல்லேலூயா அல்லேலூயா
மெல்ல எழும் நிலவே நீ,
மாலை மின்னும் சிற்றொளியே, [பல்லவி]

3 ஓடும் தெளிர் நீரோடையே,
பாடலொன்றை நீ பாடியே,
அல்லேலூயா அல்லேலூயா
வன் சக்தி தரும் ஜுவாலையே,
நீ தரும் அனல் ஒளியும், [பல்லவி]

4 பூமித்தாயே, நாளும் நீ,
ஆசீர் பொழிந்தென்னாளும்,
அல்லேலூயா அல்லேலூயா
பூ காய்கள் கனிதரும் நீ,
யாவும் நல் ஆசீர் பேணுதே, [பல்லவி]

5 மென் மனம் கொண்ட மாந்தரே,
மன்னித்தும் பங்கை படைப்பீர்,
அல்லேலூயா அல்லேலூயா
துன்பத்தினூடே துக்கித்தே,
யாவும் வைப்பீரவர் பாதம், [பல்லவி]

6 நன் மரணமே இனிமை,
காத்திரு என் கடைஸ்வாசம்,
அல்லேலூயா அல்லேலூயா
என் தந்தை வீடே சேர்த்திட,
கிறிஸ்தேசு சென்ற பாதையில், [பல்லவி]

7 .யாவும் கர்த்தரை போற்றட்டும்,
தாழ்மையாய் வீழ்ந்து குனிந்து,
அல்லேலூயா அல்லேலூயா
தந்தை சுதன் தூயாவியே,
மூவராம் ஏகர் போற்றுவோம். [பல்லவி]

…ஆமேன்

Text Information
First Line: எல்லா படைப்பும் ஒன்றாக
Title: எல்லா படைப்பும் ஒன்றாக, வல்ல நம் இராஜன் போற்றுவோம்
English Title: All creatures of our God and king
Author: Francis of Assisi
Translator (English): William H. Draper
Translator (Tamil): S. John Barathi
Refrain First Line: போற்றுவோமே, புகழ்பாடி
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [எல்லா படைப்பும் ஒன்றாக]
Key: E♭ Major
Copyright: Public DomainMedia
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us