15615. இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா?

1 இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா?
யாருக்கேனும் உதவினேனா?
யாரையேனும் நான் தேற்றிமகிழ்வித்தானா?
இல்லை என்றால் வீணன் நான்,
யார் சுமையாயினும் ஆம் லேசானதா?
நான் செய்ய முன் வந்ததினால்,
நோயுற்றோர்க்கும் ஆம் சேர்ந்தோர்க்கும் உதவினேனா?
அங்கே நான் இருந்தேனா?

பல்லவி:
எழுந்தே நீ ஏதேனும் செய்,
கனா நீ காண்பதெல்லாம் வீண்,
நன்மை செய்வது நன்று, ஆ ஆனந்தம் ஆனந்தம்,
ஆசீராம் சேவை அன்பும்.

2 இங்கு செய்யத்தக் கப்பல சேவைகள்
பல சந்தர்ப்பங்கள், உண்டே,
அதை செய்யாமலே தள்ளிவிட்டிடாமல்,
போய் இன்றேதேனும் செய்வாய்,
நாம் கொடுப்பதுவும் ஆம் நன்மையன்றோ?
அன்பாலே நாம் செய்வதினால்,
சேவை செய்வோர்தான் வாழத்தகுந்தோரன்றோ?
சோம்பினோர்க்கு இடமில்லை. [பல்லவி]

Text Information
First Line: இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா?
Title: இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா?
English Title: Have I done any good in the world today
Author: Will L. Thompson
Translator: S. John Barathi
Refrain First Line: எழுந்தே நீ ஏதேனும் செய்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா?]
Composer: Will L. Thompson
Key: G Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score

Suggestions or corrections? Contact us