15604. இன்பமாய் எண்ணு

1 எண்ணிப்பாராய் நீ கிறிஸ்துவின் சிலுவை
அவருக்காய் சுமந்திட இன்பமே,
விரைவாக, ஆம் மகிமையின் பாரம்
உண்மையுடன் அவருக்காய் செய்திட,

பல்லவி:
என்ன இன்பம், என்ன இன்பம்,
கிறிஸ்துவிற்காய் செய்வதென்ன இன்பமே,
எண்ணிப்பாராய் நீ எண்ணிப்பாராய்
நீயும் அன்பாய் செய்யும்
எல்லோருக்கும் நன்மையே.

2 எண்ணிப்பாராய் நீ சோதனையின் காலம்
கிருபையுடன் தாங்கிடுவார் நம்மையே,
நம்பினாலே, ஆம் வென்றிடுவோம் உண்மை
நிச்சயம் அவர் நம் நண்பர் வெல்வோமே, [பல்லவி]

3 எண்ணிப்பாராய் நீ பள்ளத்தாக்கினூடே
நடந்தாலும் இன்பப்பாடல் தருவார்,
உந்தன் துன்பம், ஆம் இன்பமாக மாற்றி
என்றும் துதி மகிமையும் அவர்க்கே, [பல்லவி]

Text Information
First Line: எண்ணிப்பாராய் நீ கிறிஸ்துவின் சிலுவை
Title: இன்பமாய் எண்ணு
Author: William E. Marks
Translator: S. John Barathi
Refrain First Line: என்ன இன்பம், என்ன இன்பம்
Language: English
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score

Suggestions or corrections? Contact us