15602. இரா முழுதும்

1 எந்தன் இயேசு என்னை காப்பார், இரா முழுதும்,
தன் அநாதி தீர்மானமே முன்னே செல்வார்,
பாவ இருள் சாவு துக்கம், பாதுகாத்து காலைமட்டும்
இந்த லோகின் கடன் வேண்டாம், இரா முழுதும்.

2 இராவின் இருள் நீண்டு நிழல் சூழ்ந்திடுதே,
சாத்தான் எந்தன் பாதை சுற்றி இரா முழுதும்
எந்தன் பாதை இயேசுஸ்வாமி ஆபத்தின்றி
பாரமெல்லாம் இலகுவாக்கி, பயமின்றி இரா முழுதும்.

3 கேள், அதோ ஓர் மென்குரல்தான், இரா முழுதும்,
ஆண்டவரின் அன்பு குரல், கேள் கேள் இதோ,
எத்திசையும் எந்த நாடும்,
நியாயத்தீர்ப்பின் நீங்கலாமோ?
பூமியின் மாஇருள் காலம் இரா முழுதும்.

4 நீதியின் மா சூர்யன் வர, இரா போகுமே,
அந்த நாளும் வேகம் வரும், இரா நீங்குமே,
தூங்கும் தூயர் துயில் எழ,
சேர்ந்து நாமும் பாடி போற்ற
வேந்தரென கிரீடம் சூட இரா ஓயுமே.

Text Information
First Line: எந்தன் இயேசு என்னை காப்பார், இரா முழுதும்
Title: இரா முழுதும்
English Title: Jesus Christ my Lord will keep me
Author: Melvia Booker
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [எந்தன் இயேசு என்னை காப்பார், இரா முழுதும்]
Harmonizer: Luther O Emerson
Key: G Major or modal
Source: Welsh Tune
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us