15595. இயேசுவிடமே சரணடைந்தே

1 இயேசுவிடமே சரணடைந்தே
யாவையும் நான் ஒப்புவிக்கிறேன்,
நேசித்தே நான் நம்பி அவரை
அனுதினமும் வாழ்வேனே,

பல்லவி:
சரணடைந்தேன் நான்
சரணடைந்தேன் நான்
எந்தன் நேச மீட்பரே நான்
சரணடைகிறேன்.

2 இயேசுவிடமே சரணடைந்தே
அவரின் பாதம் வீழ்கிறேன்,
இந்த உலக சிற்றின்பங்கள்
யாவையும் நான் வெறுத்தே, [பல்லவி]

3 இயேசுவே நான் சரணடைந்தேன்
என்னை முற்றும் உமக்குத்தந்தேன்,
பரிசுத்தாவி சாட்சியாக
நீர் எனக்கு நான் உமக்கு, [பல்லவி]

4 இயேசுவே நான் சரணடைந்தேன்
என்னை முற்றும் உமதாக்கும்,
உந்தன் வல்லமையால் நிரப்பும்
உந்தன் ஆசீர் தாருமே, [பல்லவி]

5 இயேசுவிடமே சரணடைந்து
இப்போ பெற்றேன் அவர் ஒளியை,
இரட்சிப்பின் மா மகிழ்ச்சி இதுவே
ஸ்தோத்திரம் உம் நாமத்திற்கே, [பல்லவி]

Text Information
First Line: இயேசுவிடமே சரணடைந்தே
Title: இயேசுவிடமே சரணடைந்தே
English Title: All to Jesus, I surrender
Author: Judson W. Van De Venter
Translator: S. John Barathi
Refrain First Line: சரணடைந்தேன் நான்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [இயேசுவிடமே சரணடைந்தே]
Composer: Winfield Scott Weeden (1896)
Adapter: S. J. Barathi
Incipit: 33443 22232 11432
Key: D Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us