15534. அவர் சன்னதியில் இரகசியமாக சஞ்சரிக்கவே

1 அவர் சன்னதியில் சஞ்சரிக்க
உள்ளம் ஏங்குதே, என் இயேசு தந்த
பாடம் மிக நல்ல பொக்கிஷம்,
உலகின் துன்பம். என்னை
ஒன்றும் செய்திடாதே,
சாத்தான் என்னை சோதித்திட்டால்
ரகசிய இடம் சென்று நானே
ஒளிந்து கொள்வேனே.

2 என் ஆன்மா தாகத்தால் நா வற்றி
சோர்ந்து சாய்கையில், அவர்
செட்டையின்கீழ் பானமுண்டு
ஊற்றுத்தண்ணீராம், என் மீட்பரும்
என்னோடிருப்பார் சம்பாஷிப்போமே,
அவர் சொல்லும் செய்தி என்னால்
மீண்டும் சொல்லலாகாது, அதை
சொல்லலாகாது.

3 தெரியும் அவர்க்கு என்தன் கஷ்டம்
மீண்டும் சொல்லுவேன், அதை
பொறுமையாய் கேட்பார்
மனச்சோர்வு நீக்கவே, அவர்
கடிந்து கொள்ளார் எந்தன் நண்பர்
என் பாவம் தெரிந்தும், அவர்
கோபம் கொள்ளார், என்னையவர்
கடிந்து கொள்ளார் பொறுமையாய்
அமைதி காப்பாரே.

4 என் ஆண்டவரின் ரகசியம்
உனக்கும் வேண்டுமோ?
அவர் நிழலில் நீ ஒளிந்துகொள்
இதுவே நற்பலன், நீ விலகி சென்றும்
அவர் சாயல் என்றும் சுமப்பாயே,
நீ மனதில் வைக்கும் அவர் சாயல்
முகத்தில் வைப்பாய் அவர் சாயல்
முகத்தில் வைப்பாயே.

Text Information
First Line: அவர் சன்னதியில் சஞ்சரிக்க
Title: அவர் சன்னதியில் இரகசியமாக சஞ்சரிக்கவே
English Title: In the secret of His presence
Author: Ellen L. Goreh
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [அவர் சன்னதியில் சஞ்சரிக்க]
Composer: George Coles Stebbins
Key: G Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us